சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா?: தினகரன் மீது நடவடிக்கை!
சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா?: தினகரன் மீது நடவடிக்கை!
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியை சேர்ந்த சசிகலா அவரது அண்ணன் மகன் மகாதேவன் மரணமடைந்துள்ளதால் பரோலில் வெளியே வருவார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதனின் மூத்த மகன் மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றபோது மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். 42 வயதான இவரது மரணம் மன்னார்குடி குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பரோலில் வெளிவர வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஏற்கனவே சசிகலாவின் உடல்நிலையை காரணம் காட்டி அவரை பரோலில் வெளியே கொண்டுவர வழக்கறிஞர்களுடன் ஆலோசித்ததாக தகவல்கள் வந்தது. இந்நிலையில் மகாதேவனின் இந்த திடீர் மரணத்தால் சசிகலா எளிதாக பரோலில் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பரோலில் வெளியே வரும் சசிகலா கட்சியிலும், குடும்பத்திலும் சில அதிரடி முடிவகளை எடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், குறிப்பாக தினகரனுக்கு எதிராக சசிகலா முடிவு எடுக்கலாம் என கூறப்படுகிறது. ஆர்கே நகர் தேர்தலில் சசிகலாவின் உத்தரவையும் மீறி போட்டியிட்டது, தன்னை வந்து சந்திக்க சொல்லிவிட்டும், சந்திக்காதது போன்ற காரணங்களால் சசிகலா தினகரன் மீது அதிருப்தியில் இருப்தாக கூறப்படுகிறது.