Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சிறையில் உண்ணாவிரதம் இருக்க சவுக்கு சங்கர் முடிவு?… வழக்கறிஞர் தகவல்!

சிறையில் உண்ணாவிரதம் இருக்க சவுக்கு சங்கர் முடிவு?… வழக்கறிஞர் தகவல்!
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (18:29 IST)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சவுக்கு சங்கர் தற்போது உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது மத்திய கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது  அரசுப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் அவரை பார்வையாளர்கள் சந்திக்க மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக ரெட்பிக்ஸ் சேனலின் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் பார்வையாளர்களைப் பார்க்க அனுமதி மறுப்பது மற்றும் 24 மணிநேரமும் தனிமை சிறையில் வைத்திருப்பது ஆகியவற்றுக்காக சவுக்கு சங்கர் நாளை முதல் சிறையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் இந்த போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளாராம்.

சவுக்கு சங்கரைப் பார்த்த அவரது வழக்கறிஞர் புகழேந்தியிடம் இதை அவர் வெளிப்படுத்தியதாக சவுக்கு சங்கரின் நண்பரின் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவருமான தடா ரஹீம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வி.சி.க.,வின் சமூகநல்லிணக்க_மனிதசங்கிலிக்கு ஆதரவு- நடிகர் கருணாஸ்