Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மாணவர்களிடமும் மதப்பிரச்சாரம்: உண்மையான மதவாத கட்சிகள் எவை?

மாணவர்களிடமும் மதப்பிரச்சாரம்: உண்மையான மதவாத கட்சிகள் எவை?
, வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (22:32 IST)
இந்தியா ஒரு இந்து நாடு என்று யாராவது கூறிவிட்டால் உடனே நடுநிலைவாதம் பேசும் போலி போராளிகள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வருவதோடு, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று கூறுவார்கள். ஆனால் அதே நேரத்தில் பிற மதத்தினர் தங்களுடைய மதத்தை திணித்தால் அதனை இந்த போலி புரட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. 
 
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் மனதில் மதத்தினை பதியவைக்கும் முயற்சியாக ஏ பார் ஆதாம், பி பார் பைபிள், சி பார் கிறிஸ்து, ஐ பார் இம்மானுவேல், ஜெ பார் ஜீசஸ் என்று குறிப்பிடப்பட்டு மாணவர்கள் மனதில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பதியவைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பள்ளியில் படிக்கும் பிற மதங்களை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கும் மாவட்ட கல்வி அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டவுடன் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவசர அவசரமாக இந்த குறிப்புகள் உள்ள கையேடுகளை கிழித்துவிட்டதாக தெரிகிறது. இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் உண்மையில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கின்றார்களா? அல்லது மதப்பிரச்சாரம் செய்கின்றார்களா? என்ற கேள்வியை அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
 
இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள ஒருசில அரசியல்வாதிகளுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் உள்ளனர். இதே இந்து மதம் குறித்த ஏதாவது ஒரு பாடத்தை மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தால் உடனே மாணவர்களிடம் காவியை திணிப்பதாக இந்த போலி போராளிகள் புரட்சி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வைத்து உண்மையான மதவாத கட்சிகள் எவை? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலூர் தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன?