ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், நாம் தமிழர் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.
தற்போதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 180 இடங்களில் முன்னிலையிலும், திமுக 182 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளன. இதேபோல மாவட்ட கவுனிலர் தேர்தலில் திமுக 79 இடங்களில் முன்னிலையிலும், அதிமுக 73 இடங்கள் முன்னிலையிலும் உள்ளது.
இதற்கு அடுத்து யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி கனிசமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மிகவும் அதிர்ச்சிகரமாக சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த இடத்திலும் முன்னிலை வகிக்கவில்லை.
மக்களவை தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு பிறகு அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தது நாம் தமிழர் கட்சி தற்போது ஒன்றும் இல்லாமல் இருப்பதால் கட்சியினர் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கி பல மணி நேரம் ஆன பின்னரும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பூஜ்ஜியத்தில் நாம் தமிழரின் வெற்றி கணக்கு உள்ளது கட்சியின் களப்பணி போதாதே காரணம் என கூறப்படுகிறது.