நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை வேறொரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கிவிட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சீமான் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையம் தற்போது அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணியில் இருந்து வரும் நிலையில் கமல்ஹாசனின் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி கடந்த சில ஆண்டுகளாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போது விவசாயி சின்னத்தை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி விட்டது. இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கும் சீமான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக இந்த வழக்கு விசாரணைக்கு வருமா? அப்படியே வந்தாலும் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிடாது என்று தான் சுப்ரீம் கோர்ட் சொல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விவசாயி சின்னம் கிட்டத்தட்ட சீமான் கையை விட்டு சென்றதாகவே கூறப்படுகிறது.