அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை தரப்பில் ஒரு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வரும் திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மேல்முறையீடு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால் பலனற்றதாகிவிடும் என செந்தில் பாலாஜி தரப்பு வலியுறுத்தியதை அடுத்து அமலாக்கத்துறை வாதத்தை நிராகரித்த நீதிபதி நாளை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் கொடுத்துள்ளார்.
எனவே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.