நாகை -இலங்கை பயணிகள் கப்பல் நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில் நாகை - சிங்கப்பூர் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவை தொடங்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நாகை மற்றும் மலேசியா இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பயணிகள் கப்பல் இயங்கி வந்தது. ஆனால் அந்த கப்பல் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அதன் பின்னர் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் நாகை - சிங்கப்பூர் மற்றும் நாகை - மலேசியா இடையே பயணிகள் கப்பலை இயக்க வேண்டும் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நாகை -இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தம் மேற்பட்டு நாளை முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருக்கும் நிலையில் நாகை - சிங்கப்பூர் மற்றும் நாகை - மலேசியா கப்பல் போக்குவரத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்திய வர்த்தக தொழில் குழு தலைவர் பாலா என்பவர் தெரிவித்துள்ளார்.
நாகை - சிங்கப்பூர், நாகை - மலேசியா சரக்கு கப்பல் மற்றும் பயணிகள் கப்பல் இயங்கினால் ஏற்றுமதி வர்த்தகம் பெருகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.