கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது. பிறகு வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஹோட்டல்கள் மட்டும் செயல்படலாம், ஆனால் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையி டீக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் டீ குடிப்பதை காரணமாய் கொண்டு கூடிவிட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டீக்கடை வியாபாரிகள் பாதிப்பு அடைந்துள்ளதுடன், அவர்களுக்கு பால் விநியோகம் செய்யும் உற்பத்தியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். சென்னையில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளுக்கு பால் விநியோகம் செய்து வந்த சில்லறை பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
சென்னையில் திருவெல்லிக்கேணியில் உள்ள மாட்டு தொழுவத்தில் 300 லிட்டர் பாலை தரையில் கொட்டி எதிர்ப்பை தெரிவித்த அவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை ஆவின் அல்லது பால் சொசைட்டிகள் வாங்கி கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.