சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் மீது சமீபத்தில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் என்பவரது தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது, அந்த விசாரணை ஆணையம் சூரப்பாவின் ஊழல்புகார் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூற்யிருந்ததது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அவரின் பதவிக்காலம் நேற்றோடு முடிந்துவிட்டது. இன்னும் 10 முதல் 15 நாட்களில் கலையரசன் ஆணையம் அடுத்த கட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவரின் பதவிக்காலம் முடிந்துள்ளதால் இனி விசாரணை வேகமெடுக்கும் என சொல்லப்படுகிறது.