முதல்முறையாக தேர்தலில் வாக்களிக்கிறேன் என்றும் அதுவும் ஒரு நல்ல கட்சிக்கு வாக்களித்த திருப்தி எனக்கு உண்டாகியது என்றும் அன்புமணி ராமதாஸ் மகள் ஓட்டு போட்ட பின் பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து மேலும் கூறிய போது நான் முதல் முறையாக ஓட்டு போடும் போது தயக்கம் இருந்தது என்று ஆனால் உள்ளே போனவுடன் எனக்கு ஓட்டு போடுவது குறித்து சொல்லிக் கொடுத்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
ஒரு நல்ல பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறோம் என்ற மகிழ்ச்சி தனக்கு இருப்பதாகவும் மேலும் அனைத்து மாணவர்களும் ஓட்டளிக்க வர வேண்டும் என்றும் நன்றாக சிந்தித்து நல்ல வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
அம்மா அப்பா சொல்கிறார்கள், நண்பர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களிக்க வேண்டாம், உங்களுக்கு எது சரியாக படுகிறதா அவருக்கு வாக்கெடுங்கள் அடுத்த ஐந்து வருடம் நம்மை யார் ஆள வேண்டும் என்பதை யோசித்து முடிவு எடுங்கள் என்று அவர் கூறினார்