கோவை மக்கள் இபிஎஸ் முதலமைச்சராக வரவேண்டும் என்று தான் வாக்களித்தார்கள் எனவும், எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.
மேலும் இபிஎஸ் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் பெறும் எனவும், அதிமுகவின் ஏக்நாத் சிண்டே என்று என்னை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவது திமுக தான் என்றும் கேள்வி ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதிலளித்தார்.
மேலும் எப்படியாவது அதிமுகவை பிளவு படுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் திமுக ஐடி விங் செயல்பட்டு கொண்டிருக்கிறது எனவும், அதிமுகவினரை பிரிக்க முடியாது, எப்போதும் நாங்கள் பிரிய மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக 52வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கும் நிலையில், கோவையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்