ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை மாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து கலாநிதி மாறன் முழுமையாக வெளியேறி சிறு அளவிலான பங்குகளை கொடுத்துவிட்டு மொத்த உரிமத்தையும் அஜய் சிங் பெற்றார்.
இதனால் பங்கு உரிமத்தை முறையாக செலுத்தாத காரணத்திற்காக காலநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் மீது வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு கலாநிதி மாறனுக்கு சாதகமாக வந்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சுமார் 250 கோடி ரூபாயை காலநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.