தோல்சீலை போராட்டத்தின் 200 வது ஆண்டு விழா இன்று நடைபெற இருக்கும் நிலையில் இதில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்
கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1822 ஆம் ஆண்டு திருவதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் ஒரு சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோல் சீலை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது
இதற்கு தெரிவித்து நடந்த தோல்சீலை போராட்டத்தில் பெண்கள் வெற்றி பெற்றனர். இந்த போராட்டத்தின் வெற்றியை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோல் சீலை போராட்டம் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெற இருக்கும் தோல் சிலை போராட்ட நிகழ்சியில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் ஆகிய இருவரும் கலந்து கொள்ள உள்ளனர். இரு மாநில முதல்வர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.