Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எடப்பாடி அரசுக்கு நன்றி! – மாணவிகளை சந்தித்த ஸ்டாலின் ட்வீட்!

எடப்பாடி அரசுக்கு நன்றி! – மாணவிகளை சந்தித்த ஸ்டாலின் ட்வீட்!
, திங்கள், 30 டிசம்பர் 2019 (13:43 IST)
கோலமிட்டதற்கு கைது செய்து தமிழகத்தையே போர்க்கோலம் வரைய செய்த எடப்பாடி அரசுக்கு நன்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் கொண்ட கோலங்களை வரைந்ததற்காக மாணவிகள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கவனம் பெற்றது. அரசின் இந்த செயலை கண்டித்து திமுகவினர் தங்கள் வாசல்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கோலங்களை வரைந்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோலமிட்டதற்காக கைது செய்யப்பட்ட மாணவிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்தனர். மாணவிகளின் முயர்சியை பாராட்டிய ஸ்டாலின் தனது ட்விட்டரில் ” மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி!” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக குட்டிச்சுவரா ஆகிறும்... வழக்கம் போல் ஆரம்பித்த சு.சுவாமி!!