கலைஞரின் முதல் தொகுதியில் சத்துணவு முட்டைகள் அழுகல் காட்சி, மாணவர்களுக்கு வழங்க இருந்த முட்டைகளில் அழுகல் மற்றும் துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு.
கரூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருந்த சத்துணவு முட்டை அழுகல் பரபரக்க வைக்கும் வீடியோவினால் பதற்றம்
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை அருகே நாகனூர் அரசு தொடக்கப்பள்ளியில் மதியம் மாணவர்களுக்கு விநியோகித்த சத்துணவு முட்டையில் முட்டைகள் அழுகி இருந்ததாகவும், முட்டையில் ஒரு வித துர்நாற்றம் வீசியதாகவும் மாணவர்கள் சாப்பிட இருந்த நிலையில், இதனை புகாராக மாணவர்கள் தெரிவிக்க பள்ளி நிர்வாகம் உடனே, பள்ளியின் மேலாண்மைக்குழுவினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தினை தொடர்பு கொண்ட போது, மூன்று குழுக்கள் இதனை விசாரித்ததாக தெரியவருகின்றது. தங்களுக்கு வழங்கிய முட்டைகள் இது போல தான் இருந்து வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. முட்டை டெண்டரில் ஏதேனும் ஊழல் நடைபெற்றுள்ளதா ? அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டிய முட்டைகள் கால தாமதமானதா ? என்று பல்வேறு கோணங்களில் மாவட்ட நிர்வாகம் விசாரணையை துவக்கி வருகின்றது. ஏற்கனவே கடந்த சில வாரங்களாகவே திருப்பூர், கரூர் மாவட்டத்தில் அடிக்கடி முட்டைகளில் குளறுபடி மற்றும் அழுகிப்போன முட்டைகளின் நிகழ்வு தொடர்வதாகவும் இனி இது போல வரும் காலங்களில் நடக்காமல் இருந்தால் வளரும் தலைமுறையான மாணவர்கள் சமுதாயம் நலமாக இருக்கும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தந்தையும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் முதன்முதலில் சட்டசபைக்கு செல்ல காரணமான இந்த குளித்தலை தொகுதிக்கு வந்த சோதனையா ? என்கின்றனர் நடுநிலையாளர்கள்