அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக மாறுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. இதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து அரபிக்கடல் பகுதியில் உருவான புயல் காரணமாக தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறண்ட நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், தாய்லாந்து அருகே உருவான மேலடுக்கு சுழற்சி அந்தமான் பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது, இப்போது புயலாக நாளை மாறயுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு பகுதி புயலாக மாறும் போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
அதோடு மணிக்கு 70 கிமீ முதல் 80 கிமீ வரை வங்கக்கடலில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.