பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர்க்க அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர் ஒருவர் வழக்கு தொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிளஸ் டூ மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மெண்ட் நடைபெற்ற தேர்வு பிறகுதான் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்றும் அந்த மாணவர் தனது மனுவில் கூறியுள்ளார்
பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார்
பிளஸ்டூ மதிப்பெண் முறையை ஏற்காத மாணவர்களுக்கு தேர்வு உண்டு என சிபிஎஸ்சி தெரிவித்துள்ளதை அடுத்து அந்த தேர்வு முடிந்து அதில் மதிப்பெண்கள் வெளிவந்த பிறகுதான் கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார்
பல்கலைக்கழக மானியக்குழு இது குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது