ரயில்வே துறைக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை வணிக நோக்கத்துக்காக விற்பனை செயவது தேச விரோத செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தின் வசம் வணிக நோக்கத்துக்காக ஒப்படைக்கப் போவதாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக தனியாருக்கு விற்பதற்கு சமம் என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் இந்தியா வாங்கிய 22 பதக்கங்களில் 13 பதக்கங்கள் ரயில்வே ஊழியர்களால் வாங்கப்பட்டவை எனக் கூறியுள்ளார். விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு தேசவிரோத செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.