சென்னை மெட்ரோ ரயில்களில் திங்கள் முதல் வெள்ளி வரை அதிக பயணிகள் பயணம் செய்தாலும் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து ஞாயிறு உள்பட விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு 50 சதவீத கட்டண சலுகையை சென்னை மெட்ரோ அளிக்க திட்டமிட்டுள்ளது
இதன்படி ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டணச் சலுகையை அளிக்க சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மெட்ரோ வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் இந்த 50% கட்டண சலுகை ஒருசில ஆண்டுகளுக்கு மட்டுமே முதல்கட்டமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பின் நிலைமைக்கு ஏற்ப இந்த சலுகையை நிறுத்துவது குறித்தோ அல்லது தொடர்வது குறித்தோ ஆலோசிக்கலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது
மெட்ரோ ரயிலில் வேலை நாட்களில் தினமும் ஒரு லட்சம் பயணிகளுக்கும் மேல் பயணம் செய்து வருகின்றனர் என்பதும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் 60 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது