சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் விபரம்!
சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் விபரம்!
ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவா ராய் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க இருப்பதால் இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் அனைவருக்கும் உள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு 5 விதத்தில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
* இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கலாம். இப்படி தீர்ப்பு வந்தால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இது மாற்றப்படும். இதற்கு மூன்று மாத கால அவசாசம் ஆகலாம். அனவே இந்த தீர்ப்பு சசிகலாவிற்கு சாதகமான ஒன்றுதான். இதனால் சசிகலா ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.
* இரண்டு நீதிபதிகளும் சசிகலாவை நிரபராதி என்று தீர்ப்பளிக்கலாம். இப்படி தீர்ப்பு வந்தால் சசிகலா முதலமைச்சராக ஆட்சி அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.
* இரண்டு நீதிபதிகளும் ஒரே கருத்தில் இந்த வழக்கை மீண்டும் கர்நாடக நீதிமன்றத்திற்கு அனுப்பி திரும்ப விசாரிக்க உத்தரவிடலாம். அப்படி உத்தரவிட்டால் நீதிபதி குன்கா வழங்கிய தண்டனை அப்படியே தான் இருக்கும். எனவே சசிகலா குற்றவாளியாகவே கருதப்படுவார். எனவே சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு இல்லை.
* இரண்டு நீதிபதிகளும் ஒரே கருத்தில் சசிகலா தரப்பை குற்றவாளி என தீர்ப்பளித்து தண்டனை வழங்கலாம். இப்படி தீர்ப்பு வந்தால் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க தகுதியற்றவர் ஆகிவிடுவார்.
* இதுவரை வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளையும் நீக்கிவிட்டு மீண்டும் இந்த வழக்கு விசாரணையை தொடங்க நீதிபதிகள் உத்தரவிடலாம். அப்படி நீதிபதிகள் உத்தரவிட்டால் சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதில் எந்த தடையும் இருக்காது. என்ன இந்த வழக்கு முடிய இன்னும் 10 வருடங்கள் ஆகிவிடும்.