ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மற்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் விட்டு விட்டு தப்பி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 8 பேர் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டார். பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் முன்னிலையில் சரணடைந்த 8 பேர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.