மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ளன. இதையடுத்து பாஜக கூட்டணித் தலைவர்களுக்கு அமித்ஷா விருந்து அளித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையடுத்து பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார். அதில் தமிழகத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் கலந்துகொண்டு இன்று சென்னை திரும்பிய சுதீஷிடம் மத்திய அமைச்சரவையில் தேமுதிக பங்கேற்குமா என நிரூபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் அளித்த சுதீஷ் ‘ அதுகுறித்து இதுவரையில் எதுவும் பேசவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதுபற்றி தேமுதிக தலைவரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து பேசி முடிவெடுப்பார்கள். தமிழகத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிமுகவுக்கு எதிராக வந்துள்ளன. ஆனால் கடந்த முறைப் போல இந்த முறையும் அதிமுக கூட்டணியே 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.