கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தொடர்ந்து மீனவ சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்யப்படுவது தொடர் கதை ஆகி வருகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து கொண்டிருந்த நிலையில், ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளை பறிமுதல் செய்து 23 மீனவர்களை கைது செய்தனர். இலங்கை காங்கேயம் துறை கடற்கரை முகாமுக்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீனவர் கைது தொடர்கதை ஆகி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மற்றும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.