பிரதமர் மோடி , கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி வரும் நிலையில், தமிழக வீரர்களை அவர் பாராட்டி டுவீட் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை மக்கள் சிறப்பாக கொண்டாடுவர்.
அந்தவகையில், இன்று தீபாவளிப் பண்டியை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றர். இந்த நிலையில் நமது பிரதமர் மோடி இன்று கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியா முதலில் போரை விரும்புவதில்லை. அமைதியை விரும்புகின்ற நாடு என்று தெரிவித்துள்ளார்.
இந்திர ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது தேசிய பாடல்களையும் ரசித்தார்.
அப்போது, ராணுவ வீரர்கள் தேச பக்தி பாடல்களைப் பாடினர்.அதன்பின்,ர் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் சுராங்கனிக்க மாலுகெனா வா என்ற தமிழ்ப் பாடலை பாடினர். இதுகுறித்து, தன் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்...என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தன் டிவிட்டர் பக்கத்தில், கார்கில் எல்லைப் பகுதியில் “சுராங்கனிக்க மாலுகெனா வா” என்ற பாடலை தமிழகத்தைச் சேர்ந்த நம் ராணுவ வீரர்கள் நமது பாரதப் பிரதமர் திரு@narendramodi அவர்கள் முன் பாடி அசத்தி தீபாவளியைக் கொண்டாடினர் என்று தெரிவித்துள்ளார்.
Edited by Sinoj