தமிழகம், புதுச்சேரியில் வரும் 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
மேலும் குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா, காரைக்காலில் மிதமான மழை பெய்யும். சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதோடு தமிழகம், புதுச்சேரியில் வரும் 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.