Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திற்கு மழை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திற்கு மழை!
, செவ்வாய், 25 மே 2021 (10:06 IST)
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும். 

 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு! – இந்தியாவில் இன்றைய நிலவரம்!