தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இலேசான மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
நேற்று முதலாக தமிழகத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் மிதமான அளவு மழை பெய்ததால் சூடு தணிந்தது. அதேபோல புதுக்கோட்டையில் அறந்தாங்கி, விராலிமலை, ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். பெரம்பலூர் அகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இலேசான மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. அதாவது ஏபரல் 14 முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். பொதுவாக அடுத்த 5 நாட்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.