Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கனிமொழி vs தமிழிசை – ஸ்டார் தொகுதியானது தூத்துக்குடி!

கனிமொழி vs தமிழிசை – ஸ்டார் தொகுதியானது தூத்துக்குடி!
, சனி, 23 பிப்ரவரி 2019 (11:21 IST)
தமிழகத்தில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.

வர இருக்கும் நாடளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலானக் கூட்டணிகள் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டன. அதையடுத்து இப்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு விவரங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும் அதிமுகக் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 5 சீட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நேரத்தில் சில தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதிகளாக மாறுவது வழக்கம். ஒருக் கட்சியின் பிரபலமானத் தலைவர் போட்டியிடும் தொகுதி அல்லது இரண்டு எதிர்க்கட்சிகளில் மிகப் பிரபலமான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ஆகியவைத் தேர்தல் களத்தில் மிகவும் கவனம் பெறும். அதுபோல இந்தாண்டு தூத்துக்குடித் தொகுதி மிகுந்த கவனம் பெறும் தொகுதியாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஏனென்றால் ஏறகனவே திமுக சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதையடுத்து இப்போது அதேத் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக அணியில் உள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தூத்துக்குடி தொகுதியும் அடங்கும். அதனால் வலிமைமிக்க திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த தமிழிசையை பாஜக களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனிமொழி மற்றும் தமிழிசை இருவருமே தமிழக அரசியலில் பிரபலமான முகம் மற்றும் அவரவர் கட்சியில் உள்ள முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் பெண் தலைவர்கள் என்பதால் இந்தப் போட்டி வரும் தேர்தலில் அதிகக் கவனம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ டிக் டாக் ’ வீடியோவால் நண்பனை கொன்ற இளைஞர்...