நேற்று அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு நடந்து கொண்டிருந்தபோது நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இந்த இணைப்பு குறித்து கிண்டலாக ஒரு கருத்தை பதிவு செய்தார். அதில் காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா' என்று கூறியிருந்தார்
கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது டுவிட்டரில் கமலுக்கு பதிலடி தரும் வகையில் ஒரு டுவீட் பதிவு செய்தார்.
அதில் போலிக்குல்லாவும் கேலிக்குல்லாவும் போடுபவர்கள் காந்தி குல்லாவையும் காவிக்குல்லாவையும் விமர்சனம் செய்வதா? என்று கூறியிருந்தார். மேலும் அணிகள் இணைப்பு குறித்து அவர் கருத்து கூறுகையில், 'இலவுகாக்கும் கிளிகளுக்கு ஓர்செய்தி,நாடு காக்கும்பாஜக பிறர்வியக்கும்ஆட்சி செய்கிறதே அன்றி,பிறகட்சியை இயக்கும் ஆட்சி செய்யவில்லை,அவசியமுமில்லை' என்று தெரிவித்திருந்தார்.
நேற்று அதிமுக இணைப்பு குறித்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும், பல டுவீட்டுக்கள் பதிவு செய்யப்பட்டதால் டுவிட்டர் இணையதளம் பரபரப்புடன் காணப்பட்டது.