புதுவையில் கடந்த கடந்த சில ஆண்டுகளாக முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது என்பதும் இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து கொண்டிருந்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில் புதுவை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக ஏற்கனவே தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் புதுவை மாநில கவர்னராகவும் கூடுதலாக பொறுப்பு ஏற்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் புதுவை மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது