நீண்டகால காத்திருப்புக்கு பிறகு தமிழக ஆறுகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓட இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழையால் இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. முக்கியமாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா பகுதிகளில் விடாமல் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அணைகள் தங்கள் கொள்ளளவை மீறி நிரம்பிவிட்டதால் மேட்டூர் அணிக்கு உபரி நீரை திறந்து விட்டுள்ளனர். இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 கன அடி உயர்ந்து 57.16 அடியாக இருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 35 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கேரள-தமிழக அணையான முல்லைபெரியாறில் நீர்மட்டம் உயர்ந்து 120 அடியை தாண்ட உள்ளது. நீண்ட கால கோரிக்கைக்கு பிறகு தமிழக ஆறுகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓட இருப்பதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதிகமான நீர்வரத்தால் மேட்டூர் அருகே உள்ள கோட்டையூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.