ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வாயிலகா நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் நடப்பு ஆண்டிலிருந்து புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும் ஆசிரியர்களை போற்றும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாத சூழலில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலமாகவே படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு ஆண்டிலிருந்து நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகளில் ஆசிரியர்களின் கொரோனா கால சேவையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி பயில ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஆசிரியர்களின் உள்ளீடும் கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.