புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற உள்ள கந்தூரி விழாவுக்கு இலவச சந்தன கட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் சின்ன ஆண்டவர் கந்தூரி விழாவும், ஜனவரி மாதம் பெரிய ஆண்டவர் கந்தூரி விழாவும் நடைபெறும் நிலையில் ஆண்டுதோறும் கந்தூரி விழாவுக்கான சந்தன கட்டைகள் தமிழக அரசால் விலையின்றி வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த ஜூலை மற்றும் அடுத்த ஜனவரியில் நடைபெற உள்ள கந்தூரி விழாக்களுக்கு இருப்பில் உள்ள 4 கிலோ சந்தன கட்டைகள் நீங்கலாக 45 கிலோ சந்தன கட்டைகள் தேவைப்படும் நிலையில் அவற்றை விலையின்றி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.