இந்திய அளவில் எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2000களின் துவக்கத்தில் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிய எய்ட்ஸ் நோய் பல கோடி உயிர்களை இதுவரை பலி வாங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகள் மக்களிடையே எய்ட்ஸ் குறித்து ஏற்படுத்திய விழுப்புணர்வின் காரணமாக தற்போது அதன் பாதிப்பு குறைந்துள்ளது.
முன்னதாக எய்ட்ஸால் இந்தியா அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மாநில அளவில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 3.96 லட்சம் பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில் நான்காவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தின் மொத்த எய்ட்ஸ் பாதிப்பு 1.55 லட்சமாக உள்ளது.