கொரோனா காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பை பொறுத்து தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரியில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படாமல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் 100 சதவீதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம் என்ற நடைமுறை அப்படியே தொடர்கிறது. அரசியல் பொது கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.