வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்க கடலில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.