வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைய தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.