தமிழகத்தில் பல மாவட்டங்களில் தரைக்காற்று வீசுவது காரணமாக வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தரைக்காற்று காரணமாக மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தரைக்காற்று வீசுவது காரணமாக வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 செல்சியஸ் உயரும் எனவும், ஏப்ரல் 2 வரை இது தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.