அரபிக்கடலில் டவ்-தே புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை டவ்-தே புயலாக மாறி தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இது குஜராத் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் நிலையில் தமிழகத்திலும் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.