விஜயகாந்த் நடித்த 'ரமணா' படத்தில் இறந்த பிணத்திற்கு சிகிச்சை அளித்து நோயாளிகளின் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் ஒரு காட்சி இருக்கும். இந்த காட்சி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதே பாணியில் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனை செய்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஈசனூர் என்ற கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல் இறங்கியுள்ளதாக கூறிய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். இதனையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி சிகிச்சை செய்தனர்.
ஆனால் அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சேகர் முழுவதுன் குணமாக வேண்டும் என்றால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் இதனால் மேலும் ரூ.2 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சேகர் குடும்பத்தினர் தங்களிடம் பணம் இல்லை என்றும் அரசு மருத்துவமனையில் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றும் நோயாளியை டிஸ்சார்ஜ் செய்துவிடுங்கள் என்றும் கூறினர்
பின்னர் நோயாளி டிஸ்சார்ஜ் செய்யபட்ட பின்னர், அவரை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சேகர் இறந்து 3 நாட்கள் ஆகிவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட சேகர் உறவினர்கள் இறந்த பிணத்திற்கு மூன்று நாட்கள் சிகிச்சை செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.