கடந்த 20 ஆண்டுகளில் டாஸ்மாக் வருமானம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் ஆனால் டாஸ்மாக் ஊழியர்களின், ஊதியம், போனஸ் மட்டும் உயரவே இல்லை என்றும் வேதனையுடன் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
2003 - 2004 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.3639 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 44 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் போனஸ் உயரவில்லை
மேலும் குறைந்த ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் பலர் பணி புரிகின்றனர். டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் ஓய்வு பெற்றும், மரணம் அடைந்தும் உள்ள நிலையில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று டாஸ்மார்க் ஊழியர்கள் புலம்பி உள்ளனர்.