முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி இருந்ததால் அவரது வேதா இல்லம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
சென்னையில் உள்ள ஜெயலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ரூ. 10 கோடிக்கும் மேல் வருமான வரி பாக்கி வைத்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதலாகவே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் வருமான வருத்துறையின் முடக்க பட்டியலில் உள்ள நிலையில் தற்போது அவது வேதா இல்லம் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலை, மேரீஸ் சாலை மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஜெயலிதாவின் சொத்துக்களும் முடக்கத்தில் இருக்கிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் முடக்கத்தில் இருந்தாலும் அவதௌ இல்லத்தை நினைவிடமான மாற்ற எந்த ஆட்சேபனையும் இல்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.