நாமக்கல்லில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தலித் மாணவனை மலம் அள்ள சொன்ன நடுநிலைப் பள்ளி ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நடுநிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி. இவர் ராமபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். இவர் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர் ஒருவரை மலம் அள்ள சொல்லி வற்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் நடந்த இந்த வழக்கில் நாமக்கல் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளது.விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.