இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதை அடுத்து காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை ஆசிரியர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் பெரிய வேறுபாடு உள்ளது என்றும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து செப். 28ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்றும், பேச்சுவார்த்தையில் காலம் தாழ்த்துவது போல் தெரிகிறது, அதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும், பேச்சுவார்த்தைக்குப் பின், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொருளாளர் கண்ணன் பேட்டி அளித்துள்ளார்.