கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் சங்கமம். இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் விந்தியா. பின்னர் அவர் 2008 ஆம் ஆண்டு நடிகை பானுபிரியாவின் சகோதரரை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, விந்தியாவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுப்பாட்டால் பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.
அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட்டார் விந்தியா. முதன்முதலால 2011 ஆம் ஆண்டு அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர் சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நட்சத்திரப் பேச்சாளராக ஜொலித்தார்.
இதற்கிடையே ஒரு தனியார் யூடியூப் சேனலில் திமுக தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பற்றி காரசாரமாக விமர்சித்தார்.
இந்நிலையில் இன்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பார்த்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா எனப் பதிவிட்டுள்ளார்,. இது வைரலாகி வருகிறது.