தமிழ் சினிமாவில் பிரபல பிண்ணி பாடகர் வேல் முருகன் அன்னையர் தினத்தை முன்னிட்டு 1500 பேருக்கு உணவு வழங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சிரமத்து ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் சினிமா பின்னணி பாடகரான வேல்முருகன் பாடகரான வேல்முருகன், அன்னையர் தினத்ஹ்டை முன்னிட்டு அயனாவரத்தில் உள்ள மக்கள் 1500 பேருக்கு உணவு வழங்கியுள்ளார்.
இவருடன் டெட்டி செகரெட்டரி பிரகாஷ் ஐஏஎஸ், ஐகோர்ட் செகரேட்டரி மோகன், உதவி செகரெட்டரி நாகப்பன் ஆகியோர் இணைந்து 1500 பேருக்கு உணவு கொடுத்துள்ளனர்.
மேலும், வேல்முருகன் அங்கு அம்மா என்று சொல்லிப் பாருங்க என்ற பாடலைப் பாடியுள்ளார்.