2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து விஜயகாந்த் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பாஜக அரசின் இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஜீரோ பட்ஜெட் என விமர்சித்திருந்தார். அதேபோல் எதிர்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த பட்ஜெட்டை இனிப்பும் கசம்பும் கலந்த பட்ஜெட் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓரே நாடு , ஒரே பதிவுத்திட்டம் 200 கல்வித் தொலைக்காட்சிகள், டிஜிட்டல் கரன்சி, இ பாஸ்போர்ட் வங்கி சேவைக் கணக்குகள்,தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. தனி நபர் வருமான வரி விலக்கு தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளித்துள்ளது. ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ள்ளார்.