தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இது குறித்து விழிப்புணர்வுகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக தமிழக அரசு இந்த காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்த காய்ச்சல் மூன்று நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் முதல்முறையாக இன்புளுயன்சா காய்ச்சலுக்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பிப்ரவரி மாதம் நிலவரப்படி 545 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.