இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவக்கல்லூரி மாணவி என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த தாரிகா பானு என்பவர் பெற்றுள்ளார்.
திருநங்கை என்ற மூன்றாம் பாலினத்தவர் என்ற ஒரே காரணத்தால் 12ஆம் வகுப்பு படிக்கும்போதே பல்வேறு சிக்கல்களை சந்தித்த தாரிகாபானுவுக்கு தேவையான மதிப்பெண் இருந்தும் மெடிக்கல் சீட் தர மறுத்ததை அடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் தாரிகாபானுவுக்கு சீட் கொடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி அவர் விரும்பிய சித்த மருத்துவக்கல்லூரியில் அவருக்கு சீட் கொடுக்கப்படவுள்ளது. இதனையடுத்து இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவக்கல்லூரி மாணவி என்ற பெருமையை தாரிகாபானு பெறுகிறார்.
மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு என ஒரு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.