கரூர் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள நத்தமேடு பகுதியில் வசித்து வந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு நந்தகுமார் (21) கவுத (19) ஆகிய இரு மகன்கள் உண்டு. இதில் நந்தகுமாருக்குத் திருமணம் ஆகிவிட்டது. டிரைவராக வேலை செய்துவருகிறார்.கவுதம் அருகே உள்ள பகுதியில் கூலி வேலைக்குச் சென்று வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கவுதம் ,தாய் அம்சவள்ளியிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதுபற்றி அம்சவள்ளி நந்தகுமாருக்குக் கூறியுள்ளார்.
பின்னர் நந்தகுமார், இதுகுறித்து தன் தம்பியிடம் கேட்டு மிரட்டியுள்ளார்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார் வீட்டில் இருந்த அம்மிக்கல்லால், கவுதமை தாக்கினார்.இதில் கவுதமுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கவுதமை கருர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கவுதம் ஏற்கவனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதனையடுத்து போலீஸார் நந்தகுமாரைக் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.